பதிவு செய்த நாள்
15
ஜூன்
2016
11:06
திருவாரூர்: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில், ஆழித் தேரோட்டம் நாளை (16ம் தேதி) நடைபெறுகிறது. திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில், 2010ல் தேரோட்டம் நடைபெற்றது. அதன்பின், தேர் சீரமைப்புக்காக, தேரோட்டம் நிறுத்தப்பட்டது. கடந்த தி.மு.க., ஆட்சி யில் தேர் சீரமைப்பிற்காக, 2.17 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. தேர் சீரமைப்பு பணி முடிந்து, கடந்த ஆண்டு அக்டோபர், 26ம் தேதி ஆழித்தேர் வெள்ளோட்டம் நடந்தது.தேரின் வடம், 425 அடி நீளமும், 21 அங்குலம் சுற்றளவும் கொண்டுள்ளது. நான்கு வடங்களின் எடை, 4 டன் ஆகும். நடப்பு ஆண்டு, ஆழித் தேரோட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. நாளை (16ம் தேதி) காலை, 7:30 மணிக்கு மேல் ஆழித்தேர், அம்பாள் தேர், சண்டிகேஸ்வரர் தேர் வடம் பிடிக்கப்பட்டு, தேரோட்டம் நடைபெற உள்ளது.