திருவாண்டார்கோவில் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூன் 2016 12:06
திருபுவனை: திருவாண்டார்கோவில் திரவுபதியம்மன் கோவிலில் 58ம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்று நடந்தது. இக்கோவிலின் தீ மிதி திருவிழா, 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதி திருவிழா நேற்று நடந்தது. இதனையொட்டி, காலை 9.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பகல் 12.00 மணிக்கு படுகளம் நடந்தது. தொடர்ந்து, 6.00 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். இரவு 8.00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.