கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நீலமங்கலம் சிவன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. இதையொட்டி மூலஸ்தான கல்மண்டப பணிகள் பூர்த்தியானது. கோவில் முன்மண்டபம் மற்றும் கோபுரம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட உள்ளது. மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடக்க வேண்டி சிவன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. விநாயகர், வள்ளி தெய்வானை முருகன் காமாட்சி ஏகாம்பரேஸ்வரர், சண்டிகேஸ்வரர், துர்க்கையம்மன், நவக்கிரகங்கள் தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.