நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு மகிஷாசூரமர்த்தினி கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு நிகும்பலா யாகம் நடந்தது. கடலுார் அடுத்த நடுவீரப்பட்டு நரியன் ஓடை அருகே உள்ள மகிஷாசூரன் மர்த்தினி கோவிலில் நேற்று முன்தினம் பவுர்ணமியை முன்னிட்டு உலக நன்மை வேண்டி நிகும்பலா யாகம் நடந்தது. அன்று இரவு 10:00 மணிக்கு யாககுண்ட பிரவேசம் நடந்தது. 10:30 மணிக்கு நிகும்பலா யாகம் துவங்கியது. இரவு 12:15 மணிக்கு மகா பூர்ணாஹூதி, மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.