கொடைக்கானல்: கொடைக்கானல் அண்ணாநகர் சின்னமாரியம்மன் கோயில் மற்றும் அப்சர்வேட்டரி புதுக்காடு பத்ராகாளியம்மன் கோயில்களில் தீச்சட்டி திருவிழா நேற்று நடந்தது. சின்னமாரியம்மன் கோயிலில் கொடியேற்றப்பட்டு திருவிழா தொடங்கி தினமும் மண்டகப்படி நடந்தது. பல்÷ வறு இடங்களில் அமைக்கப்பட்ட மண்டகப்படிகளில் சின்னமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் மின்விளக்குகளாலான தேரில் சென்று தங்கினார். நேற்று ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து சின்னமாரியம்மனுக்கு தீச்சட்டி ஏந்தி நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். புதுக்காட்டில் அமைந்துள்ள பத்ரகாளியம்மன் கோயிலிலும் தீச்சட்டி திருவிழா நடைபெற்றது. பியரி பால்ஸ் பகுதியிலிருந்து பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியபடி சென்று புதுக்காடு பத்ரகாளியம்மனுக்கு நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.