பதிவு செய்த நாள்
24
ஜூன்
2016
01:06
கோவை : பொம்மணம்பாளையம் லட்சுமி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
வடவள்ளி, பொம்மணம்பாளையம், ஜி.கே.எஸ். நகரில் உள்ள லட்சுமி விநாயகர் கோவில் திருப்பணிகள் நிறைவடைந்து, கும்பாபிஷேக விழா, ஜூன் 19ல், கணபதி பூஜையுடன் துவங்கியது. 20ம் தேதி, விநாயகர் பூஜை, பூமி பூஜையும், 21ல், அக்கி ஸங்கிரஹனம், முதற்கால யாக வேள்வியும், 22 காலை, இரண்டாம் கால யாக வேள்வி, புதுவிக்ரஹங்கள், அபிஷேக கண்திறப்பு, தேவார இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தன. மாலை மூன்றாம் கால யாக வேள்வி, யந்திரஸ்தாபனமும் நடந்தது. நேற்று காலை 7:30 மணி முதல், விநாயகர் பூஜை, நான்காம் கால யாக வேள்வி பூஜை, திருவருள் திருமேனி உயிர்ப்பித்தல் நடந்தன. காலை, 9:15 மணிக்கு, கலசங்கள் கோவிலை வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. 9:30 முதல் 10:30 மணிக்குள், கோபுர விமானமத்துக்கும், தொடர்ந்து லட்சுமி விநாயகர், பரிவாரங்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இன்று முதல், 48 நாட்களுக்கு, தினமும் மாலை, 6:30 மணிக்கு, மண்டல பூஜை நடக்கிறது.