பதிவு செய்த நாள்
24
ஜூன்
2016
01:06
திருவண்ணாமலை: கீழ்பென்னாத்தூர் அருகே, நவநீதகோபால கிருஷ்ணபெருமாள் கோவில் தேர் திருவிழாவில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அருகே மேக்களூரில் உள்ள நவநீத கோபாலகிருஷ்ண பெருமாள் கோவிலில், ஆண்டு தோறும் நடக்கும் பிரம்மோற்சவ விழா, கடந்த, 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடந்தது. துவஜாரோகனம், அங்குரார்ப்பணம் ஆகியவையும், அன்ன வாகனம், 12 கால் விமானம் (முத்தங்கிசேவை) சிறிய திருவடி, நாகவாகனம், கருடவாகனம், புன்னை விருட்சம் ஆகியவற்றில் சுவாமி அலங்கரிக்கப்பட்டு, தினமும் இரவில் வீதி உலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம்
நேற்று நடந்தது. இதையொட்டி சுவாமி நவநீதகோபாலகிருஷ்ண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. பின் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்று மாட வீதிகளில் வீதி உலா வந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தை தொடர்ந்து இரவு குதிரை வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது.