கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதுப்பேட்டை செந்தில் நகர் செல்வ விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி கடந்த, 21ம் தேதி கணபதி பூஜை, ஹோமங்கள், தீபாராதனை நடந்தது. இரண்டாம் நாளான நேற்று முன்தினம், இரண்டாம் கால யாக பூஜை, தீபாராதனை நிகழ்ச்சி, மூன்றாம் கால யாக பூஜை, இரவு மூலவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி காலை, நான்காம் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து உலக நன்மைக்காக யாகம் நிகழ்ச்சியும், இதையடுத்து கலச புறப்பாடும் நடந்தது. விழாவை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.