கன்னிவாடி:கன்னிவாடி பட்டத்து விநாயகர் கோயிலில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக, பாலாபிேஷகம் செய்யப்பட்டு, சிறப்பு மலர் அலங்காரத்துடன் ஆராதனை நடந்தது.
சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். காரமடை ராமலிங்கசுவாமி கோயில், கசவனம்பட்டி விநாயகர் கோயில், மல்லீஸ்வரர் கோயில், வெல்லம்பட்டி மாரிமுத்து சுவாமி கோயிலில், சங்கடஹர சதுர்த்தி சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது.