மணலூர்பேட்டை அண்ணாமலையார் தீர்த்தவாரி திருவிழாவிற்கு பந்தக்கால் நடும் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜன 2026 11:01
திருக்கோவிலூர்; மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் அண்ணாமலையார் தீர்த்தவாரி திருவிழாவிற்கான பந்தகால் நடும் நிகழ்ச்சி நடந்தது.
மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் வரும் 19ம் தேதி தீர்த்தவாரி திருவிழா நடக்கிறது. இதில் திருவண்ணாமலை, அண்ணாமலையார் ஆலயத்தில் இருந்து பாதம் தங்கிகளில் எழுந்தருளும் உற்சவர் அபிதகுஜாம்பால் சமேத அண்ணாமலையார் தீர்த்தவாரி திருவிழாவில் பங்கேற்று பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இதற்காக சுவாமி எழுந்தருளும் வகையில் பிரத்தியேகமாக அமைக்கப்படும் பந்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதற்காக பிரயோகவரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து இந்து சமய அறநிலைத்துறை சார்பில் முகூர்த்த கால் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, தென்பெண்ணை ஆற்றில் விழா மேடை அமைக்கும் பகுதியில் வேத மந்திரங்கள் முழங்க நடப்பட்டது. இதில் விழா குழுவினர்கள் மற்றும் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.