பதிவு செய்த நாள்
27
ஜூன்
2016
12:06
தர்மபுரி: தர்மபுரி அடுத்த பழைய தர்மபுரியில், பிரசித்தி பெற்ற முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூசாரிகள் குடும்பத்தினர் ஒன்றிணைந்து திருவிழா நடத்துவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று நடந்தது. இதில், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சமேடு, பாரூர், நாகரசம்பட்டி, சந்தூர், வெப்பாலம்பட்டி, பாமாண்டப்பட்டி, வீரகவுண்டனூர், நல்லுகவுண்டஅள்ளி, பழைய தர்மபுரி உட்பட, 15க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பங்கேற்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள், கோழிகள் பலியிடப்பட்டு, நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு நடத்தினர்.