சென்னிமலை: சென்னிமலை அடுத்துள்ள முருங்கத்தொழுவு ஸ்ரீவாகைதொழுவு அம்மன் கோவில் பொங்கல் விழா 13ம் தேதி நடக்கிறது.கொங்கு வேளாளகவுண்டர் சமூகத்தின் பெரியகுலத்தவரின் குலதெய்வமாக விளங்கும் ஸ்ரீவாகைதொழுவு அம்மன் கோவில் பெருந்துறை தாலுகா சென்னிமலை யூனியன் முருங்கத்தொழுவு கிராமத்தில் அமைந்துள்ள இக்கோவில் பொங்கல் விழா கடந்த 22 ஆண்டுகளுக்கு பின் செப்டம்பர் 13ம் தேதி நடக்கிறது.இதற்காக பூச்சாட்டுதல் நிகழ்ச்சி கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி நடந்தது. கடந்த அக்டோபர் 7ம் தேதி சுவாமிக்கு காப்புகட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. வரும் 13ம் தேதி புதன்கிழமை காலை 5 மணிக்கு கணபதி ஹோமமும் அதைத்தொடர்ந்து பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு குதிரை துளுக்கு கேட்டல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு மஹாபூஜை தீபாரதனை நடக்கிறது.ஏற்பாடுகளை கிராம கொத்துகாரர் மற்றும் கிராமகமிட்டியினர் செய்து வருகின்றனர்.