பாபநாசம்: தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள 108 சிவாலயம் கோவிலில் அன்னதான திட்டம் துவங்கப்பட்டது. தமிழக அரசால் விரிவுபடுத்த அன்னதான திட்டத்தின் கீழ், பாபநாசம் 108 சிவாலயம் கோவிலுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இக்கோவிலில் புதிதாக துவங்கபட்ட அன்னதான திட்டத்தை பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ., துரைக்கண்ணு கலந்து கொண்டு பக்தர்களுக்கு உணவு பரிமாறி துவக்கிவைத்தார்.