மரக்காணம்: மரக்காணம் அடுத்த அனுமந்தை கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, சந்தனகாப்பு மற்றும் தீபாரதனை நடந்தது. மாலை 5:30 மணி முதல் இரவு 11:30 வரை யாகசாலை நிகழ்ச்சி நடந்தது. இரவு 12:00 மணிக்கு, அம்மன் மலர் அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் தீசட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். அறங்காவலர் சின்னசாமி, ஊராட்சி மன்ற தலைவர் ரஜேந்திரன், மற்றும் சீத்தாராமன், பாலசுந் தரம், மோகன், ஆறுமுகம் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்தனர்.