பதிவு செய்த நாள்
06
ஜூலை
2016
11:07
சென்னை: மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் சபாவில், ‘மஹா பெரியவா என்ற நாடகம், கலாமித்ரா என்ற நாடகக் குழுவினரால் அரங்கேற்றப்பட்டது. கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் சார்பில், ‘மஹா பெரியவா என்ற நாடகத்தை, கலாமித்ரா என்ற நாடகக்குழுவினரைக் கொண்டு தய õரித்துள்ளது. மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் சபாவில், இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டது. ராம்கி, இந்த நாடகத்தை எழுதி, இயக்கி, காஞ்சி மஹா பெரியவராகவும் மிகச்சிறப்பாக நடித்தார். காஞ்சி மஹா பெரியவருடன், பக்தர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களின் தொகுப்பே இந்த நாடகம். மொத்தம், 100 பாத்திரங்கள், இதில் இடம் பெற்றிருந்தன. பதினோரு நடிக, நடிகையர், மாறுபட்ட வேடங்களில் அத்தனை பாத்திரங்களையும் நடித்திருப்பது சிறப்பாக இருந்தது. எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி வேடத்தில் வந்த கவுரி, ஒரு தியாகராஜ கீர்த்தனையும் பாடி அசத்தினார்.
மெய் சிலிர்ப்பு: பெரியவர் பாதயாத்திரை செல்லும்போது, திடீரென்று பாதை மாறி மண்மங்கலம் என்ற ஊருக்குச் செல்கிறார். அங்கு ஒரு முஸ்லிம் தம்பதி வீட்டு பின்புறம் தோண்டும்போது, சிவலிங்கமும், பழங்கால சிவன் கோவிலும் தென்படுகிறது. உடனே, அந்த தம்பதி, அந்த நிலத்தை சிவன் கோவில் கட்டிக்கொள்ள ஊர் மக்களுக்கு விட்டுக் கொடுக்கின்றனர். காஞ்சி பெரியவர் மவுனத்தில் இருந்து, இத்தனையும் நடத்திக்கொடுத்து விட்டு, அந்த முஸ்லிம் தம்பதி, மெக்கா மதீனா பயணச்செலவை ஏற்றுக் கொள்ள வைப்பதும் மெய் சிலிர்க்க வைத்த காட்சியாக இருந்தது. முஸ்லிம் தம்பதியாக, ஜி.நாராயணன், விஜயமாலினி மற்றும் ஊர்க்காரர்களாக ஜெயராமன் மற்றும் எஸ்.நாராயணன் நடித்திருந்தனர்.
பங்கேற்றோர்: ஐயங்கார் சுவாமிகளாக ஸ்ரீகுமார், சேட்ஜியாக சாய்குமார், டாக்டர் பத்ரிநாத்தாக வெங்கடராமன் மற்றும் எஸ்.எஸ்.லதா, எஸ்.பாலாஜி, வி.பாலாஜி சந்துரு விக்னேஷ் ஆகியோரது நடிப்பும் அருமை. மகேஷ் பார்த்தவாஜின் பின்னணி இசை தொகுப்பு, நாடகத்துக்கு பலம் சேர்த்தது. சித்ராவும், சிவகுமாரும் மேடை பின்னணியை கவனித்துக் கொண்டனர். மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டிய ஓர் அருமையான படைப்பு. பல்லி விழும் பலன், ஆங்கிலப்புலமை, பிச்சைக்காரனுடன் உரையாடல், அரச ப்ரதட்சணமாக பெரியவர்களையே சுற்றி வருதல், ஏழை எளிய வர்களுக்கு உதவுதல், வேதசம்ரட்சணம் என பல்வேறு விஷயங்களைக் கொண்ட இந்த நாடகத்தை இன்னும் பலர் கண்டு களிக்க, பல முறை ÷மடையேறுவதற்கு சபாக்களும், ஆதரவளிக்க ரசிகர்களும் முன் வர வேண்டும்.