தேவநாத சுவாமி கோவில் உண்டியலில் ரூ. 17 லட்சம் வசூல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜூலை 2016 11:07
கடலுார்: கடலுார் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் காணிக்கை உண்டியல் மூலமாக 17 லட்சத்து 93 ஆயிரத்து 749 ரூபாய் வசூல் கிடைத்தது. நடு நாட்டு திருப்பதிகளில் ஒன்றான கடலுார் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. காணிக்கை உண்டியல் திறந்து எண்ணும் பணி நேற்று, நடந்தது. இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ஜோதி முன்னிலையில், நடந்த காணிக்கை எண்ணும் பணியில் வங்கி பணியாளர்கள், தன்னார்வ தொண்டர்கள், பக்தர்கள் ஈடுபட்டனர். 17 லட்சத்து 93 ஆயிரத்து 749 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இதேப் போன்று, 378 கிராம் தங்கம், 176 கிராம் வெள்ளி, வெளிநாட்டு கரன்சிகள் 16 காணிக்கையாக கிடைத்தது. செயல் அலுவலர்கள் தேவநாத சுவாமி கோவில் நாகராஜன், பாடலீஸ்வரர் கோவில் ரத்தினாம்பாள், ஆ ய்வாளர் பெரிமுத்து உடனிருந்தனர்.