பதிவு செய்த நாள்
09
ஜூலை
2016
02:07
பாக்கம்: பாக்கம் கரிய மாணிக்க பெருமாள் கோவிலில், நாளை மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெறவுள்ளது. திருவள்ளூர் அடுத்துள்ள பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ளது, அமிர்தவல்லி நாயிகா சமேத கரிய மாணிக்க பெருமாள் கோவில். புதிதாக புதுப்பிக்கப்பட்ட இந்த கோவிலில், மகா சம்ப்ரோக்ஷணம் வரும், 10ம் தேதி நடைபெறவுள்ளது. முன்னதாக, நேற்று காலை அங்குரார்ப்பணமும், அக்னி பிரதிஷ்டையும், குண்ட ஹோமமும், முதல் கால யாகசாலை பூஜையும் நடந்தது. பின், இன்று காலை 8:00 மணிக்கு அஷ்டபந்தனம் சாற்றுதலும், இரண்டாம் காலயாகசாலை பூஜையும், மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜையும், நுாதன விமானங்களுக்கு கண் திறத்தல் நிகழ்ச்சியும், மகா சாந்தி ஹோமமும் நடைபெறும். அதன்பின், நாளை காலை 7:00 மணிக்கு, விஸ்வரூபம் புண்யாஹவாசனமும், கும்ப ஆராதனை மற்றும் கடம் புறப்பாடும் நடைபெறும். பின், காலை 9:00 மணிக்கு மேல் நுாதன விமானங்களுக்கு மகா சம்ப்ரோக்ஷணமும், மகா அபிஷேகமும் நடைபெறும். அதை தொடர்ந்து, மாலை 4:00 மணிக்கு திருக்கல்யாணமும், மாலை 6:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் பெருமாள் வீதியுலாவும் நடைபெறும். தொடர்ந்து, 48 நாட்களுக்கு மண்டல பூஜைகள் நடைபெறும்.