மங்களநாதசுவாமி கோயிலில் மாணிக்கவாசகர் குருபூஜை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூலை 2016 02:07
கீழக்கரை, :உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி சமேத மங்களநாதசுவாமி கோயிலில் சகஸ்ரலிங்கத்திற்கு அருகில் தனி சன்னதி கோயிலாக மாணிக்கவாசகர் எழுந்தருளியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் மகம் அன்று மாணிக்கவாசகரின் ஜென்ம நட்சத்திரம் தின குருபூஜை நடக்கிறது. நேற்று மாணிக்கவாசகருக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜைகளை முத்துக்குமார் சிவாச்சாரியார் செய்திருந்தார். சிவனடியார்கள் மற்றும் பள்ளி மாணவர்களால் திருவாசகம் முற்றோதல் பாடப்பட்டது. அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் திவான் மகேந்திரன், செயல் அலுவலர் சுவாமிநாதன், பேஷ்கார் சுப்பையா ஆகியோர் செய்திருந்தனர்.