பதிவு செய்த நாள்
09
ஜூலை
2016
02:07
கடலுார்: கடலுார் வில்வநகர் திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 11ம் தேதி நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று (9ம் தேதி) காலை 8:00 மணிக்கு அனுக்ஞை, கணபதி ேஹாமம், நவக்கிரக ேஹாமம், தன பூஜை, கோ பூஜை, பகல் 12:00 மணிக்கு புதிய பிம்பங்கள் கரிக்கோலம், மாலை 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி, ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், முதல் கால யாகசாலை பூஜை நடக்கிறது. நாளை (10ம் தேதி) காலை 9:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, 108 மூலிகை ேஹாமம், மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை, விநாயகர் பூஜை, மண்டப பூஜை, இரவு 9:30 மணிக்கு அஷ்டபந்தன சாற்றுதல் நடக்கிறது. தொடர்ந்து 11ம் தேதி காலை 7:00 மணிக்கு விநாயகர் பூஜையும் தொடர்ந்து யாத்ராதானம், கடம் புறப்பாடாகி, 9:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு அஷேகம் நடக்கிறது.