திருப்புவனம்: திருப்புவனம் ஆனந்த அய்யப்பன் கோயில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடந்தது. திருப்புவனத்தில் இருந்து வருடம்தோறும் ஏராளமான பக்தர்கள் அய்யப்பனுக்கு விரதமிருந்து சென்று வருகின்றனர்.
வருடம் முழுவதும் அய்யப்பனை தரிசனம் செய்ய திருப்புவனம் புதுõரில் ஆனந்த அய்யப்பன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த சில வருடங்களாக திருப்பணி வேலைகள் நடந்து வந்தன. திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கும்பாபிசேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை காலை யாகசாலை பூஜைகள் தொடங்கின. நேற்று அதிகாலை மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. காலை 9.50 மணிக்கு குருநாதர் போஸ் சுவாமி தலைமையில் கோவை பாலசிவாத்மஜன் சிவாச்சார்யார்கள் புனித நிர் அடங்கிய கலசங்களை சுமந்து யாகசாலையை வலம் வந்தனர்.காலை 10.15 மணிக்கு கோயில் கோபுரத்தை கருடன் மும்முறை வலம் வர கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிசேகத்தை நடத்தி வைத்தனர். கும்பாபிசேகத்தை முன்னிட்டு ஆனந்த அய்யப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. அன்னதானம் நடந்தது.கும்பாபிசேகத்திற்கான ஏற்பாடுகளை திருப்புவனம்புதுõர் ஆனந்த அய்யப்பன்சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.