அரூர்: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த தாதனூரில், மாரியம்மன், காளியம்மன் திருவிழா கடந்த, 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 12ம் தேதி வினாயகருக்கு சிறப்பு பூஜையும், பால் அபிஷேகமும் நடந்தது. பின்னர் மாரியம்மனுக்கு கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் பவனி நடந்தது. நாளை அம்மனுக்கு மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து ஓங்காளியம்மனுக்கு கிடாய் வெட்டுதலும் நடக்க உள்ளது.