அந்தியூர்: தமிழகத்தில் புகழ்பெற்ற, அந்தியூர் குருநாதசுவாமி கோவில், தேர்த்திருவிழா மற்றும் மாட்டு சந்தை ஆண்டுதோறும் ஆடி மாதம் நடக்கும். இதற்கான பூச்சாட்டு விழா, 20ம் தேதி நடக்கிறது. வரும், 27ம் தேதி கொடியேற்றம் நடக்கிறது. இதை தொடர்ந்து, ஆக.,3ம் தேதி முதல் வன பூஜை நடக்கிறது. தொடர்ந்து, 10ம் தேதி முதல், 13ம் தேதி வரை பண்டிகையின் முக்கிய நிகழ்வான தேர்திருவிழா மற்றும் மாடு, குதிரை சந்தை நடக்கிறது. ஆக.,17ம் தேதி பால் பூஜையுடன் விழா முடிகிறது.