திருவள்ளூர்: திருவள்ளூர் சிவ - விஷ்ணு கோவிலில், நேற்று ஜலநாராயணருக்கு ஏகாதசி அபிஷேகம் நடைபெற்றது.திருவள்ளூர் பூங்கா நகரில் சிவ - விஷ்ணு கோவில் மற்றும் ஜலநாராயணர் சன்னதி அமைந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் ஏகாதசி தினங்களில், ஜலநாராயண பெருமாளுக்கு பன்னீர் மற்றும் வாசனை திரவியங்களால், அபிஷேகம் செய்யப்படுகிறது. நேற்று ஏகாதசியை முன்னிட்டு, ஜலநாராயண பெருமாளுக்கு காலை, 9:00 மணி முதல், 10:30 மணி வரை பன்னீர் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அலங்காரம் மற்றும் அர்ச்சனைகளை தொடர்ந்து, மகாலட்சுமியின் அம்சமான வலம்புரி சங்கில் நெல்லிக்கனி வைத்து பன்னீர் மற்றும் புஷ்பங்கள் நிறைந்த தீர்த்தத்தை கொண்டு சுவாமியை வலம் வந்து பக்தர்கள் வழிபட்டனர்.