திருவண்ணாமலை: திருவண்ணாமலை, சிஷ்யா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள, ஸ்ரீலஷ்மி ஹயக்ரீவர் கோவில் கும்பாபிஷே விழா நேற்று சிறப்பாக நடந்தது. நேற்று முன்தினம் முதல் கால யாகபூஜை நடத்தப்பட்டது. நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. பின்னர், யாகசாலையில் வைக்கப்பட்ட புனித கலச நீரை, வினோத் மற்றும் அச்சுதன் பட்டர் தலைமலையில் எடுத்து சென்று, ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் கோவில் கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.