ஓசூர், வெங்கடேஷ் நகரில் உள்ள லட்சுமி வெங்கட்ரமண சுவாமி கோவில், கோகுல் நகர் வேணுகோபால சுவாமி கோவில், ஓசூர் அடுத்த கோபசந்திரம் வெங்கடேஸ்வர சுவாமி கோவில், சூளகிரி பிரசன்ன வரதராஜ சுவாமி கோவில், சூளகிரி அருகே பஸ்தலபள்ளி திம்மராய சுவாமி கோவில், ஓசூர் அருகே குடிசெட்லு திம்மராய சுவாமி கோவில்களில், நேற்று முதல் ஏகாதசி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதேபோல், தேன்கனிக்கோட்டை பேட்டராயசாமி, அலசநத்தம் லட்சுமி வெங்கடேஸ்வர சுவாமி கோவில், தேன்கனிக்கோட்டை காந்தி சாலையில் உள்ள பாண்டுரங்க சுவாமி கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.