பதிவு செய்த நாள்
19
ஜூலை
2016
11:07
திருப்புலிவனம்: திருப்புலிவனத்தில் உள்ள திரிசூல காளியம்மன் கோவிலில், தீமிதி திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது.முன்னதாக, காலை, 6:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், 7:00 மணிக்கு உலக நன்மை வேண்டி யாக வேள்வி பூஜையும், 8:00 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடந்தது. 9:00 மணிக்கு அன்னதானம் அளிக்கப்பட்டு, 11:00 மணிக்கு வேப்பம் சீலை சார்த்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து, மதியம், 12:30 மணிக்கு கூழ்வார்த்தல் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு கோவில் வளாகத்தில், 30க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். இரவு, 7:30 மணிக்கு மலர் அலங்காரத்தில் வீதியுலா வந்த அம்மனை, தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர்.