வடமதுரை பெருமாள் கோயில் தேரோட்டம்: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூலை 2016 11:07
வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழாவில் நேற்று மாலை தேரோட்டம் நடந்தது. கடந்த ஜூலை 11ல் கொடியேற்றத்துடன் துவங்கி வரும் 23ம் தேதி வரை நடைபெறும் 13 நாள் திருவிழாவில், நாள்தோறும் இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு, மண்டகப்படிதாரர் சிறப்பு வழிபாடு, கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சிகளுள் ஒன்றான திருக்கல்யாணம், கடந்த ஜூலை 17 இரவு சவுந்தரவள்ளி தாயார் சன்னதியில் நடந்தது.
தேரோட்டம்: திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. முன்னதாக மதுரை அழகர்மலை தீர்த்தம் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சன்னதியில் இருந்து ஊர் பிரமுகர்கள் அழைத்து வர, முத்தங்கி அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சவுந்தரராஜப்பெருமாள் தேரில் எழுந்தருளிார். மாலை 5.20 மணியளவில் பக்தர்கள் கரகோஷத்துடன் தேரோட்டம் நடந்தது. துணை தாசில்தார் வீரதேவன், துணை தலைமை சர்வேயர் முத்துக்குமார், பேரூராட்சி தலைவர் பாப்பாத்தி, துணைத்தலைவர் பாலசுப்பிரமணி, செயல் அலுவலர் வன்னியானந்தம் பங்கேற்றனர்.