கோவைக்கு வடகிழக்கே 43 கி.மீ. தூரத்தில் ஆலத்தூர் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள வெங்கடேசப் பெருமாள் கோயிலின் மேற்கே உள்ள குளத்தில் நீராடியபின், பயபக்தியுடன் துளசி, வேப்பங்கொழுந்து, மாங்கொழுந்து, அரளிப்பூ, எலுமிச்சைச்சாறு முதலான பொருட்களைத் தீயிலிட்டு, அதிலிருந்து வரும் புகையைப் பிடித்து, அந்தக் கரித்தூளை சொரி, சிரங்குகளின் மீது பூசினால் தோல்நோய் குணமாகிறதாம்.