பதிவு செய்த நாள்
22
ஜூலை
2016
12:07
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அம்மன் சன்னதி முன்பு புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்து தீபாரதனை காண்பிக்கப்பட்டது. ராமேஸ்வரம் கோயிலில் பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி முன்புள்ள பழமையான கொடி மரம் சேதமடைந்ததால் அகற்றப்பட்டது. இதற்கு பதில் ரூ.5 லட்சம் செலவில் 40 அடி உயரம் கொண்ட தேக்கு மரத்தால் ஆன புதிய கொடிமரம் நிர்மாணிக்கும் பணிகளை ஸ்தபதிகள் துவக்கினர். தொடர்ந்து தங்க முலாம் பூசப்பட்ட தகடுகள் புதுப்பிக்கப்பட்டு கொடிமரத்தில் பொருத்தும் பணி நடந்தது. இதையடுத்து அம்மன் சன்னதி முன்பு புதிய கொடிமரம் நேற்று காலை பிரதிஷ்டை செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கோயில் தக்கார் குமரன் சேதுபதி, இணை ஆணையர் செல்வராஜ், நகராட்சி தலைவர் அர்ச்சுணன், கோயில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகணன், ராம்கோ நிர்வாகி சாரதா தீபா, பா.ஜ.க., நிர்வாகிகள் நாகேந்திரன், ராமு, யாத்திரை பணியாளர் சங்க தலைவர் மகேந்திரன், இந்து அமைப்பு நிர்வாகிகள் ராமமூர்த்தி, பிரபாகரன் உள்பட பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.