Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தில் திடீர் விரிசல்! அருணாசலேஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி முதல் வெள்ளி கோவில்களில் கோலாகலம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆடி முதல் வெள்ளி கோவில்களில் கோலாகலம்!

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2016
10:07

ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அம்மன் கோவில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அம்மனுக்கு பாலாபிஷேகம், புற்றுக்கு பால் வார்த்தல், மாவிளக்கு ஏற்றுதல், பொங்கல் வைத்து படையல் ஆகிய வழிபாடுகள் விமரிசையாக அரங்கேறின. தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக் கிழமைகளிலும் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இதனால், பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.

அபிஷேக அலங்காரம்: நேற்று, ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு, திருமுல்லைவாயில் பச்சையம்மன் கோவில், மயிலாப்பூர் முண்டகக் கன்னி அம்மன் கோவில், சைதாப்பேட்டை கடும்பாடி அம்மன், தி.நகர் முப்பாத்தம்மன், திருவேற்காடு கருமாரியம்மன், கோடம்பாக்கம் ஆதி துலுக்கானத்தம்மன், நங்கநல்லுார் ராஜேஸ்வரி அம்மன் கோவில், அடையாறு முத்துமாரியம்மன், திருவல்லிக்கேணி மாங்காடு காமாட்சி அம்மன், அங்காளபரமேஸ்வரி அம்மன், மடிப்பாக்கம் பொன்னியம்மன், ரத்தினமங்கலம் அரைக்காசு அம்மன் உள்ளிட்ட கோவில்களில் அதிகாலையிலேயே சிறப்பு அபிஷேக அலங்கார நடந்தது.

மாவிளக்கு வழிபாடு:
அதிகாலையே பெண் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். வேளச்சேரி, ஆதம்பாக்கம் புற்றுக் கோவில், உள்ளகரம் திரவுபதியம்மன் கோவில், மடிப்பாக்கம் குணாளம்மன் கோவில் உள்ளிட்ட புற்று உள்ள கோவில்களில் பக்தர்கள் பால் ஊற்றி, பழம் வைத்து வழிபாடு செய்தனர். பெரும்பாலான அம்மன் கோவில்களில் பொங்கல் வைத்து படையலிட்டனர்; மாவிளக்கும் ஏற்றி வழிபட்டனர். பிரதான கோவில்களில் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டிருந்தனர். - நமது நிருபர் -

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar