நடுவீரப்பட்டு: எழுமேடு பச்சைவாழியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. விழாவையொட்டி, கடந்த 22ம் தேதி காலை 9:00 மணிக்கு விநாயகர், வள்ளி தேவசேனா சுப்ரமணியர், பச்சைவாழியம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 5:30 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.