கும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டை, உத்திரக்குளம், நாகாத்தம்மன் கோவிலில் நேற்று, மூன்றாம் ஆண்டு கூழ் ஊற்றும் திருவிழா நடைபெற்றது. வீதிஉலா சென்ற அம்மனுக்கு, ஏராளமான பெண்கள், பால்குடம் எடுத்து வழிபட்டனர். அதைத் தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பாலாபி ஷேகம், அலங்காரம், ஆரத்தி நடைபெற்றது. அம்மனுக்கு கூழ் ஊற்றுதல், அலகு குத்துதல், கும்பம் போடுதல் நிகழ்வுகள் நடைபெற்றன.