’ரோப்கார்’ நிறுத்தம் எதிரொலி ’வின்ச்ல் செல்ல காத்திருந்த பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூலை 2016 01:07
பழநி: பழநி மலைக்கோயில் ’ரோப்கார்’ பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டதால் வின்ச்-ல் பக்தர்கள் ஒருமணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தனர். பழநி மலைக்கோயிலுக்கு 3நிமிடத்தில் எளிதாக செல்லும் வகையில் ’ரோப்கார்’, 8 நிமிடங்களில் செல்ல மூன்று வின்ச்-கள் இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் ஒருநாள் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ’ரோப்கார்’ நிறுத்தப்பட்டது. இதன்காரணமாக சஷ்டியை முன்னிட்டு குவிந்த பக்தர்கள் வின்ச் ஸ்டேஷனில் மட்டும் அதிகபட்சமாக ஒருமணிநேரத்திற்கு மேலாக காத்திருந்து மலைக்கோயிலுக்கு சென்றனர். சனி,ஞாயிறு பொதுவிடுமுறை கார்த்திகை, சஷ்டிபோன்ற விசேஷ நாட்களில் ரோப்கார் பராமரிப்பு பணிக்காக நிறுத்துவதால் வயதான, குழந்தையுடன் வரும் தாய்மார்கள் உள்ளிட்ட பக்தர்கள் சிரமப்படுகின்றனர். ஆகையால் விஷேச, விடுமுறை நாட்களில் பராமரிப்பு பணி செய்வதை தவிர்த்து சாதாரண நாட்களில் அப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.