பதிவு செய்த நாள்
28
ஜூலை
2016
02:07
மேச்சேரி: மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலுக்கு, ஆடி அமாவாசையை முன்னிட்டு, ஒரு லட்சம் பக்தர்கள் வருவர் என்பதால், பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேச்சேரியில், பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவிலில், மாதந்தோறும் அமாவாசையன்று, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவர். அதில், ஆண்டுதோறும் ஆடி அமாவாசையன்று, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவர். நடப்பாண்டு ஆக., 2ம் தேதி ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு ஒரே நாளில் வருவதால், ஒரு லட்சம் பக்தர்கள் வரை, வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், பத்ரகாளியம்மன் கோவிலில் பலத்த பாதுகாப்பு போட, போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்காக, வெளிமாவட்ட போலீசாரையும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளனர். ஆடி அமாவாசையை முன்னிட்டு, தர்மபுரி, சேலம் பகுதிகளில் இருந்து, மேச்சேரிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கவும், அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.