ஊத்துக்கோட்டை: பரணி நாளை ஒட்டி, முருகப்பெருமான் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஊத்துக்கோட்டையில் உள்ள ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ளது, வள்ளி தெய்வானை சமேத முருக பெருமான் கோவில். ஒவ்வொரு ஆண்டும் ஆடிக்கிருத்திகை முன்தினம் பரணி தினத்தன்று சுவாமி வீதியுலா வருவது வழக்கம். இந்தாண்டு, நேற்று காலை, முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின், உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் ஊத்துக்கோட்டையில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.