சூலுார்: ஆடி கிருத்திகையை ஒட்டி சூலுார் தையல்நாயகி உடனமர் வைத்தீஸ்வரன் கோவில், அன்னமட வீதி பழனியாண்டவர் கோவில், கரு மத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவிலில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. நேற்று காலை சூலுார் சிவன் கோவிலில் முருகனுக்கு அபிஷேக பூஜை நடந்தது. சுவாமி திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து நடந்த அன்னதானத்தை முன்னாள் மேயர் வேலுசாமி துவக்கி வைத்தார். சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.