அன்னுார்: மன்னீஸ்வரர் கோவிலில் இன்று குருப்பெயர்ச்சி விழா நடக்கிறது. ’மேற்றலை தஞ்சாவூர்’ என்றழைக்கப்படும் அன்னுார் மன்னீஸ்வரர் கோவில், 1,000 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில், குருப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, தட்சிணாமூர்த்தி சன்னதியில், இன்று காலை 8:00 மணிக்கு வேள்வி பூஜை துவங்குகிறது. 9.00 மணிக்கு வழிபாடு நடக்கிறது. 9:33 மணிக்கு குருபகவான் சிம்மராசியிலிருந்து கன்னிராசிக்கு பிரவேசிக்கிறார். பின்னர் குரு பகவானுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. மகா தீபாராதனை நடக்கிறது.