ஓசூர்: ஓசூர் அடுத்த தொரப்பள்ளி அக்ரஹாரத்தில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நேற்று ஆடி திருவிழா நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து நேற்று காலை, 8 மணிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, 9 மணிக்கு பால் குடங்கள் மற்றும் பால் காவடி எடுத்து வந்து, சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை, 6 மணிக்கு புஷ்ப அலங்காரம் மற்றும் பல்லக்கு உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.