கரூர்: ’ஆடிப்பெருக்கு முன்னிட்டு அமராவதி, காவிரி ஆற்றில் ஆபத்தான இடங்களில் குளிக்க வேண்டாம்’ என, பொதுமக்களுக்கு கலெக்டர் கோவிந்தராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: ஆடிப்பெருக்கு முன்னிட்டு பொதுமக்களால் காவிரி மற்றும் அமராவதி ஆகிய ஆறுகளில், பல இடங்களில் புனித நீராடி சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அவ்வாறு, ஆறுகளில் பல இடங்களில் புனித நீராடுவதற்காக பொதுமக்கள், பொதுப்பணித்துறையினரால் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே குளிக்க வேண்டும். மேலும், அசம்பாவிதங்கள் ஏதும் நேராமல் முன்னெச்சரிக்கையாக இருக்க, பாதுகாப்பற்ற ஆபத்தான பகுதியாக கண்டறியப்பட்டுள்ள இடங்களில், பொதுமக்கள் கண்டிப்பாக குளிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.