நாமக்கல்லிருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது மோகனூர். இங்குள்ள ஸ்வாமியின் திருநாமம் ஸ்ரீஅசலதீபேஸ்வரர். மூலவரின் சன்னதியில் தீபம் எப்போதும் அசையாமல் ஒளிர்ந்தபடி இருக்குமாம். எனவேதான் இந்தத் திருநாமம். காவிரி வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஓடும் தலம் இது. எனவே, காசிக்கு நிகரான திருத்தலம் எனப் போற்றுவர். ஆடிப்பெருக்கு நாளில் ஸ்வாமி, அம்பாளுக்கு காவிரி நீரால் அபிஷேகித்து சிறப்பு பூஜைகள் செய்வர்.