பதிவு செய்த நாள்
02
ஆக
2016
03:08
மொடக்குறிச்சி: தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா, அரச்சலூர் அருகே ஓடாநிலையில், அரசு சார்பில் இன்று நடக்கிறது. விழாவை ஒட்டி, தீரன் சின்னமலை நினைவிட வளாகத்தில் அரசு சார்பில் ஸ்டால்கள், துப்புரவு பணிகள், மேடை வெளி வளாக கூரைகள், உணவு கூடாரங்கள், குடிநீர் வினியோகம், அமைச்சர்கள் தங்குமிடம், பொது சுகாதாரம் ஆகிய பணிகள் நடந்தன. இந்த பணிகளை ஆர்.டி.ஓ., தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளுடன், கலெக்டர் பிரபாகர் நேற்று காலை ஆய்வு நடத்தினார். பின்னர் பாதுகாப்பு தொடர்பான பணிகளை ஆய்வு செய்ய, மாலையிலும் சென்றார். கலெக்டருடன் அமைச்சர் கருப்பண்ணனும் சென்றார். ஆய்வு பணிகளை இருவரும் பார்வையிட்டனர். இரண்டு முறை ஆய்வுக்கு வந்த கலெக்டரால், அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.