பதிவு செய்த நாள்
02
ஆக
2016
03:08
சூளை:குரு பெயர்ச்சியை முன்னிட்டு, சூளை அங்காளம்மன் கோவிலில், இன்று காலை சிறப்பு யாகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை சூளை அங்காளம்மன் கோவில் தெருவில், அறநிலையத்துறைக்கு உட்பட்ட அங்காளம்மன் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில், குரு பகவான், தட்சிணாமூர்த்தி, நவகிரகத்திற்கு தனி சன்னிதி உள்ளது. இன்று காலை குருபெயர்ச்சி நடைபெறுவதையொட்டி, காலை 7:00 மணிக்கு கோவில் வளாகத்தில் குருபெயர்ச்சி யாகம், அதனை தொடர்ந்து குருமங்கல யாகம், நவகிரக சாந்தி யாகம், அஷ்டலஷ்சி, குபேர யாகம் நடைபெறுகிறது. யாகபூஜைகள் முடிந்த பிறகு, 9:45 மணிக்கு குருப்பெயர்ச்சி தரிசனம், 10:00 மணியளவில் குருபெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடைபெறவிருக்கிறது. குரு பெயர்ச்சியன்று பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகளான மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிதாரர்கள், பரிகாரபூஜை செய்வதற்கு, கோவில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.