Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேதம் படித்தால் உலகை படிப்பதற்கு ... திருவொற்றியூர் தட்சிணாமூர்த்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புல்லூர் கோவிலில் ஆடிப்பெருக்கு விழா : தமிழகம், ஆந்திரா பக்தர்கள் திரண்டனர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஆக
2016
12:08

வேலுார்: வாணியம்பாடி அருகே புல்லுார் கனக நாச்சியம்மன் கோவிலில், நேற்று ஆடிப்பெருக்கு விழா நடந்தது. இதில், தமிழகம் மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வேலுார் மாவட்டம், வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திர எல்லையில், புல்லுார் பாலாற்று பகுதியில் கனக நாச்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. இதை, கடந்த 50 ஆண்டுகளாக, தமிழக மக்கள் பராமரித்து வந்தனர். பின், இந்த கோவில் தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வந்தது.

சிறப்பு பூஜை : இங்கு, வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில், அம்மனுக்கு சிறப்பு பூஜைகளை செய்து, தமிழக கிராம மக்கள் வழிபாடு நடத்தி வந்தனர். அத்தோடு, ஆண்டுதோறும் ஆடி மாதத்தில், ஆடிப்பெருக்கு விழாவை கோலாகலமாக கொண்டாடி வந்தனர். இந்நிலையில், சித்துார் மாவட்டம் குப்பம் மண்டலம் கங்குந்தி ஊராட்சி பெரும்பள்ளம் கிராம எல்லைக்குள் கனக நாச்சியம்மன் கோவில் இருப்பதாகக் கூறி, சமீபத்தில் ஆந்திர மாநில அரசின் அறநிலையத்துறை அதிகாரிகள், இந்த கோவிலை அதிரடியாக கைப்பற்றினர். இதற்கு, தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.இதை கொஞ்சமும் கண்டு கொள்ளாத ஆந்திர அரசு, கோவிலுக்கு மின் இணைப்பு வழங்கியதோடு, போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்தது. இதற்கிடையே, ஆண்டுதோறும் நடக்கும் ஆடிப்பெருக்கு விழா, இந்த ஆண்டு நடக்குமா? என்ற கேள்வி தமிழக மக்கள் இடையே எழுந்தது.

ஆந்திர அரசு : இந்நிலையில், இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழாவை, ஆந்திர அரசே நடத்துவதாக அறிவிப்பு வெளியானது. இதுதொடர்பாக, தமிழில் நோட்டீஸ் அச்சிட்டு வினியோகித்த ஆந்திர அரசு, ஆடிப்பெருக்கு விழாவில் தமிழக மக்களும் திரளாக பங்கேற்க அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, கனக நாச்சியம்மன் கோவிலில் நேற்று ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக நடந்தது. அதிகாலை, 3:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், 5:00 மணிக்கு, தீப ஆராதனையும், பல்வேறு பூஜைகளும் நடந்தன.

தடுப்பணையில் படகு விட முடிவு : பாலாற்றின் குறுக்கே புல்லுாரில் ஆந்திர அரசு கட்டிய தடுப்பணை, சமீபத்தில், 5 அடியிலிருந்து, 12 அடியாக உயர்த்தி கட்டப்பட்டது. மேலும், தரையில் இருந்து, 5 அடி பள்ளமும் தோண்டப்பட்டுள்ளது. இதனால், அங்கு, 17 அடி ஆழத்துக்கு தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. இதைத்தொடர்ந்து, தடுப்பணை அருகே படகு குழாம் அமைக்க, ஆந்திர மாநில அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக, கடந்த 2 நாட்களாக தடுப்பணையில் பரிசல் சவாரிக்கான வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. இதற்கு, 50 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் பங்கேற்காதது ஏன்? : கனக நாச்சியம்மன் கோவிலில் நேற்று நடந்த ஆடிப்பெருக்கு விழாவில், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்பதாக, அதற்கான அழைப்பிதழில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அவர் நேற்றைய விழாவில் பங்கேற்கவில்லை இதுகுறித்து விசாரித்தபோது, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி, ஆந்திராவில், நேற்று பந்த் நடத்த ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன. இதனால், ஏற்கனவே திட்டமிட்டபடி, கனக நாச்சியம்மன் கோவில் ஆடிப்பெருக்கு விழாவில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்து கொள்ள முடியவில்லை என்று, அம்மாநில அறநிலையத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar