Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் மதுரையை தொடர்ந்து ராமேஸ்வரத்திலும் ‘ரீல்ஸ்’ கேள்விக்குறியாகிறது புனித தலங்களின் பாதுகாப்பு மதுரையை தொடர்ந்து ராமேஸ்வரத்திலும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீண்டும் இன்று வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்; தரிசித்து பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மீண்டும் இன்று வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்; தரிசித்து பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

03 மே
2026
07:05

மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் தடம்பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்று வைகை ஆற்றில் மீண்டும் எழுந்தருளிய கள்ளழகரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், பச்சைப்பட்டு உடுத்தி, கடலென திரண்ட பக்தர்களின், கோவிந்தா கோஷம் விண்ணை பிளக்க, வைகை ஆற்றில் மே1ம் தேதி காலை எழுந்தருளினார். திருவிழாவின் ஒரு பகுதியாக மண்டூக மகரிஷிக்கு கள்ளழகர் சாப விமோசனம் அளிக்கும் நிகழச்சி நடந்தது. இதனை முன்னிட்டு சேஷ வாகனத்தில் புறப்பட்ட கள்ளழகர், வண்டியூர் வைகை ஆற்றில் உள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு தேனூர் கிராமத்தவருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடந்தது. இதையடுத்து கள்ளழகர் கருட வாகனத்தில் எழுந்தருளி, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து கருட வாகனத்தில் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளிய கள்ளழகர், நேற்று இரவு ராமராயர் மண்டபத்துக்கு வந்தார். அங்கு விடிய விடிய தசாவதார அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

தொடர்ந்து இன்று 3ம் தேதி ராமராயர் மண்டகப்படியிலிருந்து அனந்தராயர் பல்லக்கில் ராசாங்க திருக்கோலத்தில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திற்கு புறப்பட்டு, வைகை ஆற்றில் மீண்டும் எழுந்தருளினார் கள்ளழகர். கள்ளழகரை ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். நாளை அதிகாலையில் பூப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் அழகர்கோவில் புறப்படுகிறார். வழிநெடுகிலும் மண்டகப்படிகளில் எழுந்தருளும் அழகர், மே 5 காலை 10:40 மணிக்கு மேல் 11:10 மணிக்குள் இருப்பிடம் சேருகிறார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar