Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
52 ஆண்டுகளாக கிராம மக்களுக்கு மகாபாரத ... காளஹஸ்தி உண்டியல் காணிக்கை ரூ.78 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோட்டை மாரியம்மன் கோவில் கம்பம் நடும் விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
கோட்டை மாரியம்மன் கோவில் கம்பம் நடும் விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

03 ஆக
2016
12:08

சேலம்: ஆடிப்பண்டிகையை முன்னிட்டு, சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில், நேற்று இரவு கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில், ஆடிப்பண்டிகை கடந்த மாதம், 27 ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. ஆடிப்பண்டிகையின் முக்கிய நிகழ்வாக, நேற்று கம்பம் நடும் விழா நடந்தது. இரவு, 8.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட கம்பத்துக்கு, அம்மன் கருவறைக்கு பின்னால் சிறப்பு அபிஷேம், பூஜைகள் செய்யப்பட்டன. மேளதாளம் முழங்க, பூசாரிகள் கம்பத்தை சுமந்தபடி கோவில் உட்பிரகாரம், கொடிமரம் என மூன்று முறை வலம் வந்து, பின்னர் கோவில் உட்பிரகாரத்தில் சூலத்திற்கு அருகே கம்பத்தை நட்டனர். பக்தர்கள் மலர்கள் தூவி கம்பத்தை வழிபட்டனர். தொடர்ந்து திருக்கல்யாண நிகழ்ச்சியும், இரவு, 9 மணிக்கு மேல் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. உள்ளூர் விடுமுறை தினமான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், கம்பம் நடும் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கிய ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் ஸ்ரீ பத்மாவதி சீனிவாச பரிணய உற்சவங்கள் (திருமணத் திருவிழா) மிகச் சிறப்பான ... மேலும்
 
temple news
 உத்திரமேரூர்: உத்திரமேரூர், சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவ விழாவையொட்டி, கருட ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயிலில் விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகம் இருந்தது.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar