பதிவு செய்த நாள்
03
ஆக
2016
12:08
நகரி:வாயுலிங்கேஸ்வரர் கோவிலில், பக்தர்கள், 18 நாட்களில், 78.30 லட்சம் ரூபாய், 310 கிலோ வெள்ளி உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். சித்துார் மாவட்டம், வாயுலிங்கேஸ்வர சுவாமி கோவிலுக்கு, தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற உண்டியல்களில், ரொக்கம், தங்கம், வெள்ளி மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை செலுத்துகின்றனர். அந்த வகையில், 18 நாட்களில், பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை நேற்று முன்தினம் கோவில் அதிகாரி, பிரம்மராம்பா முன்னிலையில் ஊழியர்கள் எண்ணினர். இதில், 78,30,973 ரூபாய் ரொக்கம், 310 கிலோ வெள்ளி, 163 வெளிநாட்டு கரன்சி மற்றும் 224 கிராம் தங்கம் இருந்தது. இதில் பக்தர் ஒருவர், 100 கிராம் தங்க பிஸ்கட்டும் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.