அலங்காநல்லுார் பாலமேடு மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள சித்தி விநாயகர், பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம் முடிந்து சிவாச்சாரியர் ராமசுப்பிரமணியன் தலைமையில் நேற்று மண்டல பூஜை நடந்தது. பரிகார தெய்வங்களான சின்ன கருப்பு, பெரிய கருப்பு, சிவன் ஆகிய தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்தனர். சத்திரவெள்ளாளபட்டியில் உள்ள சுடலை மாடசுவாமி, கைக்கொண்ட ஐயன்சுவாமி மற்றும் அலங்காநல்லுார் அருகே தண்டை-யில் உள்ள திருவெற்றி ஐயன் உட்பட பரிகார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.