பதிவு செய்த நாள்
05
ஆக
2016
12:08
காக்களூர்: திருவள்ளூர் அடுத்த, பூங்கா நகர், யோகஞான தட்சிணாமூர்த்தி பீடத்தில், நேற்று, 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது.திருவள்ளூர் அடுத்த, பூங்கா நகர், யோகஞான தட்சிணாமூர்த்தி கோவிலில் ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும், 108 லிட்டர் பாலாபிஷேகம் நடைபெறும். நேற்று காலை, 10:00 மணியளவில், குரு பகவானுக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மலர் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில், காக்களூர், பூங்கா நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல், திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவில், சிவ - விஷ்ணு கோவில்களில் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. மணவாள நகர், மங்களீஸ்வரர் கோவிலில், உள்ள தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, குரு பகவானை தரிசனம் செய்து வழிபட்டனர்.