பவானி செல்லியாண்டியம்மன் கோவிலில் ஆடிப் பூரம் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஆக 2016 02:08
பவானி: பவானி, செல்லியாண்டியம்மன் கோவிலில் (5.8.16) வெள்ளிக்கிழமை ஆடிப் பூரம் திருவிழா நடந்தது. திருவிழாவுக்காக, கூடுதுறையில் இருந்து, 108 பால் குடங்களோடு, பக்தர்கள் பவானி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்று செல்லியாண்டியம்மன் கோவிலை அடைந்தனர். மதியம், 12 மணிக்கு, அம்மனுக்கு பால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை நடந்தது. இரவு, 7 மணிக்கு, அம்மன் திருவீதி உலா புறப்பாடு நடந்தது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை, செல்லியாண்டியம்மன் கோவில் ஆடிப் பூர திருவிழா குழுவினர் செய்திருந்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.