பதிவு செய்த நாள்
06
ஆக
2016
02:08
அந்தியூர்: அந்தியூர் அருகே உள்ள செம்முனீஸ்வரர் கோவில் ஆடித் திருவிழாவில், 500 கிடாய்களை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.
அந்தியூரை அடுத்துள்ள, வெள்ளிதிருப்பூர் செம்முனீஸ்வரர் கோவிலில், ஆடித் திருவிழாவிற்காக, கடந்த ஜூலை மாதம், 22ம் தேதி பூச்சாட்டப்பட்டது. நாள்தோரும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. (5.8.16) வெள்ளிக்கிழமை , தேர்த் திருவிழாவுக்கான முதல் வனபூஜை நடந்தது. குரும்பபாளையம் மடப்பள்ளியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து, செம்முனி ஆண்டவர், மன்னாதீஸ்வரர், பச்சியம்மன் சுவாமிகளை காலை, 10 மணிக்கு மேல் வனக்கோவிலுக்கு கொண்டு சென்றனர். பகல், 12 மணியளவில் மூன்று தேர்களும் வனக்கோவிலை சென்றடைந்ததும், பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை, 3 மணிக்கு அம்மன் அழைத்தல் நடந்தது. அந்தியூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து, வந்திருந்த பக்தர்கள், 500க்கும் மேற்பட்ட கிடாய்களை பலி கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று முழுவதும் வனக்கோவிலில் இருந்து தரிசனம் தந்த மூன்று சுவாமிகளையும் இன்று மீண்டும் மடப்பள்ளிக்கு கொண்டு செல்வர்.